Asianet News TamilAsianet News Tamil

Watch : நடுக்கடலில் பழுதாகி கடலில் மூழ்கிய படகு! 3 மணி நேரம் கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு!

தூத்துக்குடி அருகே நடு கடலில் படகு பழுதாகி கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை சக மீனவர்கள் உயிருடன் மீட்டனர். இந்த விபத்தில் சுமார் 10 லட்சம் மதிப்புள்ள நாட்டு படகு மற்றும் மீன்பிடி வலைகள் கடலில் மூழ்கி சேதமடைந்தன.
 

The boat broke down in the middle of the sea and sank in the sea! Rescued 4 fishermen
Author
First Published Apr 27, 2023, 6:42 PM IST

தூத்துக்குடி திரேஸ் புரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது நாட்டு படகில் நண்டு பிடிப்பதற்காக ரமேஷ், பிரதீப் ,செல்வம், ராபின் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்

இந்நிலையில் இன்று அதிகாலை நடுக்கடல் பகுதியில் நண்டு வலை வீசிக்கொண்டிருக்கும்போது படகில் இயந்திர பழுது ஏற்பட்டு படகில் கடல் நீர் உட்பகுந்து படகு முற்றிலுமாக கடலுக்குள் கவிழ்ந்து மூழ்கியுள்ளது இதில் படகில் இருந்த ரமேஷ், செல்வம், பிரதீப், ராபின் ஆகிய நான்கு மீனவர்களும் போயாவை பிடித்துக் கொண்டு சுமார் மூன்று மணி நேரம் கடலில் தத்தளித்துள்ளனர்

அப்போது அந்த வழியாக வந்த தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களையும் காப்பாற்றி தருவைகுளம் கடற் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கு அவர்களுக்கு முதலுதவிகள் செய்யப்பட்டது பின்னர் மீட்கப்பட்ட மீனவர்கள் திரேஷ் புரம் கடற்கரைக்கு திரும்பினர்



இந்த விபத்தில், சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான படகு மற்றும் வலைகள் கடலில் மூழ்கியதாகவும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறையும் தங்களுக்கு வாழ்வாதாரம் காக்க தேவையான நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios