சாத்தான்குளத்தில் தந்தை - மகனை சிறையில் அடைக்க உடற் தகுதி சான்றிதழ் அளித்த அரசு மருத்துவர் ஒரு மாதம் விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை- மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரை விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைப்பதற்கு முன்பு இருவருக்கும் அரசு மருத்துவமனையில் தகுதி சான்று பெறப்பட்டது. அப்போது தந்தை, மகனின் புட்டத்தில் அதிகளவு ரத்த கசிவு இருந்தபோதும் அரசு மருத்துவர் வினிலா, அவர்களை சிறையில் அடைக்க தகுதி சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்ததுபோல மருத்துவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.


இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், அவர் 15 நாட்கள் விடுப்பில் சென்றார். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் மருத்துவர் வினிலாவிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணைக்குப் பிறகு விஜிலா ஒரு மாதம் ஊதியம் இல்லாமல் விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல் துறை, மருத்துவம், நீதித்துறை என பல தரப்பினர் மீது புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மருத்துவர் அடுத்தடுத்த விடுப்பு எடுத்துவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.