பிரபல எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!
தமிழின் சிறந்த படைப்பாக சூல் நாவல் தேர்வு செய்யப்பட்டு அதன் ஆசிரியர் தர்மனுக்கு சாகித்ய அகடமி விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் உருளைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். சோ.தர்மன் என்கிற புனைப்பெயரில் நாவல்கள் எழுதி வருகிறார். விவசாயிகளின் வேதனை பதிவு செய்யும் வகையில் படைப்புக்களை உருவாக்கி வரும் இவர், ஈரம், தூர்வை, சோகவனம் உட்பட 7 நூல்களை எழுதி இருக்கிறார். இந்தநிலையில் இவரின் 'சூல்' நாவலுக்கு தமிழின் சிறந்த படைப்பாக மத்திய அரசு சாகித்ய அகாடமி விருது அறிவித்துள்ளது.
இவரின் கூகை நாவலுக்காக தமிழக அரசு ஏற்கனவே விருது வழங்கி சிறப்பித்திருந்தது. தற்போது சாகித்ய அகாடமி விருது பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் அவர், தான் நடிகன் அல்ல எழுத்தாளன் என்றார். சூரிய காந்தி போல இல்லாமல் மூலிகைச் செடி போல பணியாற்றி வருவதாக கூறியிருக்கிறார். மேலும் எந்த விளம்பரமும் இல்லாமல் பணியாற்றி வரும் தனக்கு தொடர்ந்து அங்கீகாரம் கிடைத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.