Asianet News TamilAsianet News Tamil

அட கடவுளே! திருமணமான 4வது நாளில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்! எங்களை விட்டுட்டு போயிட்டையே பெற்றோர் கதறல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த மேலாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவரது மகன் பழனிக்குமார் (30). இவருக்கும் முள்ளக்காட்டை முத்துமாரி (21) என்பவருக்கும் கடந்த 10ம் தேதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. 

Newly married couple drowns on 4th day of marriage
Author
First Published Apr 15, 2023, 7:52 AM IST | Last Updated Apr 15, 2023, 7:55 AM IST

திருமணமான 4வது நாளில் புதுமண தம்பதி நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராமத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த மேலாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவரது மகன் பழனிக்குமார் (30). இவருக்கும் முள்ளக்காட்டை முத்துமாரி (21) என்பவருக்கும் கடந்த 10ம் தேதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் புதுமண தம்பதியினர் விநாயகர் கோவிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டு விட்டு வருவதாக சென்றுள்ளனர். ஆனால், கோயிலுக்கு சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். 

இதையும் படிங்க;- மாணவிகள் குனியும் போது வளைச்சு வளைச்சு போட்டோ.. வீடியோ.. ஆபாச வாத்தியாரை ரவுண்ட் கட்டிய கிராம மக்கள்..

Newly married couple drowns on 4th day of marriage

இதனிடையே, மேலாத்தூர் குடிநீர் தேக்க தொட்டி அருகே உள்ள குளத்தில் பழனிக்குமார் மற்றும் முத்துமாரி உடல்கள் மிதப்பாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இருவரின் உடல்களை மிதப்பதை கண்டு இருவீட்டார் பெற்றோர்களும் அதிர்ச்சியில் அழுது கதறினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க;-  ப்ளீஸ் நான் இப்ப கர்ப்பமா இருக்கேன்.. விட்டுடு.. கதறியும் விடாமல் கதற கதற பலாத்காரம் செய்த கொடூரன்..!

Newly married couple drowns on 4th day of marriage

சம்பவ இடத்திற்கு விரைந்த விரைந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, புதுமண தம்பதியின் இறப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 4 நாட்களே ஆன நிலையில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராமத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios