படுகொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்தினரிடம் ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்கிய கனிமொழி
தூத்துக்குடி மாவட்டத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை ரூ.1 கோடிக்கான காசோலையை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் மணல் கொள்ளையர்களால் கடுமையாக வெட்டப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லூர்து பிரான்சிஸின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று லூர்து பிரான்சிஸ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
இந்த கொலை வழக்கை விசாரிப்பதற்கு விசாரணை அதிகாரி அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொடர்புடைய குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
நாகையில் இந்திய கடற்படை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கூடிய விரைவில் அவர் அதை நிறைவேற்றுவார். அது மட்டுமில்லாமல் அந்தப் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவதற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மணல் திருட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதியளித்தார்.