Seeman: சீமானின் மனநிலையை பரிசோதிக்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன் விமர்சனம்
கலைஞரை அவதூறாக பேசும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களை கண்டிப்பதை விட்டுவிட்டு சிரித்துக் கொண்டிருக்கும் சீமானுக்கு தலைமை பண்பு கிடையாது என அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம்.
தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறான கருத்துகளை சீமான் தெரிவித்து வருகிறார். கலைஞர் பற்றி தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டு மக்களுக்காகவும், மொழியின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றியவர். தமிழ் மொழியை செம்மொழி ஆக்கியவர்.
மகளிர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்தவர். மாணவர்களுக்கான கல்விக்கடன் ரத்து, கணினி வழங்கும் திட்டம், முதல் பட்டதாரி திட்டம் உட்பட பல திட்டங்களை தந்தவர். தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் கலைஞர். அவரை அவதூறாக பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை என செய்தி வராத நாளே இல்லை; முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை காட்டம்
கலைஞரை அவதூறாக பேசும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களை கண்டிப்பதை விட்டுவிட்டு சீமான் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு தலைவருக்கான பண்பு கிடையாது. கலைஞரின் மறைவின் போது அவரை புகழந்து பேசியவர் தற்போது மாற்றி பேசுகிறார். தமிழக முதல்வர், கழகத்தின் தலைவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு எங்கள் கட்சியினர் அமைதியாக உள்ளனர். அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகள் கூறும்போது நாங்கள் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.
சீமான் கொள்கை இல்லாதவர். வாய்க்கு வந்ததை பேசுகிறார். சட்டம் ஒழுங்கில் பிரச்சினை ஏற்படுத்த் முயன்று வருகிறார். ஏற்கனவே கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சாத்தான்களின் பிள்ளைகள் என்று கூறியவர் தான் சீமான். ஈரோட்டில் தூய்மை பணியாளர்களை சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசியவர். அரைவேக்காட்டு தனமாக சீமான் தினமும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவிக்கிறார். அவரது மனநிலையை சோதிக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் தமிழக்ததிற்கு அநீதி இழைக்காதீர்கள்; கர்நாடகா துணைமுதல்வருக்கு அன்புமணி கண்டனம்
இலங்கை தமிழர் பிரச்சினையை முன்நிறுத்தி உலக அளவில் அவர் நிதி பெற்று வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ராஜபக்சேவை போல திமுக.வையும், கட்சியின் தலைவர்களையும் தமிழர்களின் விரோதியாக சித்தரித்து அவதூறாக பேசி வரும் சீமானுக்கு நாவடக்கம் தேவை என தெரிவித்துள்ளார்.