தூத்துக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி .இவரது மனைவி பெயர் வசந்தி (50 ). இவர்களுக்கு முத்துலக்ஷ்மணன் (29 ) என்கிற மகன் உள்ளார் . 
நாராயணசாமி சென்னையில் ஒரு ஆசிரமத்தில் தங்கியுள்ளார் . வசந்தி தன் மகனுடன் தூத்துகுடியில் வசித்து வந்தார் .  

இந்த நிலையில் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் வசந்தி உயிரிழந்ததாக கூறப்படுகிறது . தன்னை பத்துமாதம் சுமந்து பெற்ற தாய் என்றுகூட பாராமல் , இறுதிச் சடங்கிற்கு  பணம் இல்லை என்று கூறி அருகில் உள்ள குப்பை தொட்டியில் உடலை வீசியுள்ளார் . பெண் பிணம் ஒன்று கிடப்பதை பார்த்த துப்புரவு தொழிலாளர்கள் இதுகுறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர் .

சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்த போலீசார் , அது வசந்தி எனவும் , வீசி சென்றது அவரது மகன் என்றும் தெரிய வந்தது . உடனடியாக வசந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . பின்னர் முத்துலக்ஷ்மணனிடம் அறிவுரை கூறி தாயின் பிணத்தை அடக்கம் செய்ய உதவி செய்தனர்.