நாட்டின் பிரதமர் இப்படியா பேசுவது? பிரதமர் மோடிக்கு எதிராக கோவில்பட்டு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோவில்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 103 தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று கேரளா, கர்நாடாகா உட்பட 13 மாநிங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மானிலம், பன்ஜ்வாரா நகரில் கடந்த 21ம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், மக்களிடம் உள்ள சொத்துகள் கணக்கெடுக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளது. இந்த சொத்துகளை சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு பிரித்து கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளார் என தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் பிரதமர் மோடியின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தல் புகார் அளித்துள்ளன.
#BREAKING: சினிமா பாணியில் ஆம்னி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து.. 20 பேர் படுகாயம்..!
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சுக்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேச ஒருமைப்பாட்டிற்கு பாதகமாகவும் மதவெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசியும் தேர்தல், விதிமுறைகளையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிராகவும் நடந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் தமிழரசன் தலைமையில் அந்த அமைப்பினர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.