Kanimozhi: தூத்துக்குடியில் மீண்டும் திமுக; கனிமொழியை எதிர்த்த அனைத்து வேட்பாளர்களுக்கும் டெபாசிட் காலி
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஓரிரு தொகுதிகளை தவிற புதுவை உட்பட அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர். அதன்படி தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முதல்சுற்று முதலே முன்னிலை வகித்து வந்தார்.
இறுதி நிமிடம் வரை நீடித்த திரில்; நூலிழையில் வெற்றியை தவறவிட்ட சௌமியா அன்புமணி
இறுதியில் வெற்றியை உறுதி செய்த கனிமொழி 5 லட்சத்து 40 ஆயிரத்து 729 வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் சிவாமி வேலுமணி 3 லட்சத்து 97 ஆயிரத்து 738 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை பதிவு செய்தார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜயசீலன் 1 லட்சத்து 22 ஆயிரத்து 380 வாக்குகளை பெற்றார்.
Coimbatore Constituency: சொல்லி அடித்த திமுக; கோவையில் 500 பேருக்கு ஆடு பிரியாணி வழங்கி கொண்டாட்டம்
இதனிடையே திமுக வேட்பாளர் கனிமொழி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உட்பட 27 வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார். இதன் மூலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் டெபாசிட்டை காலி செய்த வேட்பாளர் என்ற தனிச்சிறப்பை கனிமொழி பெற்றுள்ளார். மக்களவைத் தேர்தலில் புதுவை உட்பட தமிழகம் முழுவதும் என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.