கல்லறையால் குடும்பத்தில் பிரச்சினை; தந்தையின் கல்லறையை உடைத்தெறிந்த மகன்
தூத்துக்குடி மாவட்டத்தில் தனது கணவரின் கல்லறையை உடைத்து சேதப்படுத்திய எனது மகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள குலசேகரன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரரானி. இவருடைய கணவர் ரெத்தினசாமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சௌந்தரராணி கணவர் இறந்த பிறகு பண்ணை வீட்டில் இளைய மகனுடன் வசித்து வருகிறார். மூத்த மகனான சுடலை ராஜா மெய்ஞாணபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் பண்ணை விட்டு அருகிலேயே சுடலைராஜா புதிய வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். பண்ணை வீட்டிற்கு பின்புறம் தந்தை ரெத்தினசாமியின் கல்லறை உள்ளது. அதை சுடலை ராஜா கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரவில் தரைமட்டமாக உடைத்துள்ளார். இதை அறிந்த தாயார் நேரடியாக அவரிடம் சென்று தந்தையின் கல்லறையை ஏன் உடைத்தாய் என்று கேட்டுள்ளார்.
திருச்சியில் காதல் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை; கணவன் தப்பி ஓட்டம்
அதற்கு தந்தை கல்லறை இருப்பதினால் என்னுடைய மனைவி, குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கல்லறையை இடித்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் மணமுடைந்த தாயார் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு சுடலை ராஜாவிடம் காவல்துறை அதிகாரி கல்லறையில் 15 நாட்களுக்குள் அதே இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்று சாத்தான்குளம் காவல் துறையினர் கண்டித்து அனுப்பி உள்ளனர்.
திமுகவினரின் செருப்பைக்கூட ஒருவராலும் தொட முடியாது - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்
15 நாட்கள் கழித்தும் கல்லறை கட்டிக் கொடுத்ததால் இன்று அவருடைய தாயார் சாத்தான்குளம் டி எஸ் பி அலுவலகத்திற்கு தங்களுடைய கணவரின் கல்லறையை அதே இடத்தில் கட்ட வேண்டும் என்று கண்ணீர் மல்க புகார் அளிக்க வந்திருந்தார். ஆனால் டிஎஸ்பி அங்கு இல்லாததால் அங்குள்ள அதிகாரியிடம் புகார் மனுவை அளித்துவிட்டுச் சென்றார்.