சினிமா பாணியில் ரன்னிங்போதெ பயங்கர சத்தத்துடன் வெடித்த கார் டயர்! 3 பேர் ரத்த வெள்ளத்தில் பலி! 8 பேர் படுகாயம்
தற்போது மகள் பிரபா கர்ப்பிணியாக உள்ளதால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 11 பேர் பெத்துரெட்டிபட்டியில் இருந்து நேற்று அதிகாலை காரில் புறப்பட்டு திருச்செந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
தூத்துக்குடி குறுக்குச்சாலை அருகே கார் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தாய், மகன் மற்றும் ஆசிரியை உள்பட 3 பேர் சம்ப இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.படுகாயங்களுடன் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(71) இவரது மனைவி சங்கரேஸ்வரி (62). தம்பதிக்கு கனகதர்மராஜ் (40), சங்கர் (38), ராமர் (35) என 3 மகன்கள் மற்றும் பிரபா என ஒரு மகள். இவர்களில் பிரபாவை கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் திருமணம் செய்து கொடுத்தனர்.
இதையும் படிங்க;- ஸ்ரீமதி உடலில் கைரேகைகள்! அதிக காயங்கள் இருந்ததாக கூறியும் 5 பேருக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்
தற்போது பிரபா கர்ப்பிணியாக உள்ளதால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 11 பேர் பெத்துரெட்டிபட்டியில் இருந்து நேற்று அதிகாலை காரில் புறப்பட்டு திருச்செந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். காரை சங்கர் ஓட்டி வந்தார். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென காரின் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி வேப்பமரத்தில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த சங்கரேஸ்வரி, சாத்தூரைச் சேர்ந்த ஆசிரியை மருதாயி (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற சங்கர், அவரது குழந்தைகள் பீமஹி (10), பீமன் (7) மற்றும் ராமர் (35), பழனிச்சாமி, கனகதர்மராஜ் (40), அவரது மனைவி முத்துலட்சுமி (35). இவர்களது குழந்தைகள் ஓவிய அரசி (10), நிவித்குரு (7) ஆகிய 9 பேரும் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க;- வடிவேலு, பார்த்திபன் ஒரே ரகளைதான்!இணையத்தில் வைரலாகும் வேற லெவல் திருமண அழைப்பிதழ்! நீங்க பார்த்தா சிரிப்பீங்க
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.