Asianet News TamilAsianet News Tamil

படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு - தூத்துக்குடி ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.

4 fishermen who were stranded in the middle of the sea after their boat overturned were safely rescued said Thoothukudi Collector
Author
First Published May 13, 2023, 7:06 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் கடல் பகுதியில் இருந்து ஜெனிபர் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆரோக்கியம், எலிங்டன் ,மோத்தி உள்ளிட்ட நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று நள்ளிரவு அவர்களது பைபர் படகு காற்று காரணமாக நல்ல தண்ணி தீவு கடல் பகுதி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நான்கு  மீனவர்களும் படகை பிடித்துக் கொண்டு கடலில் தத்தளித்துள்ளனர்.

இந்நிலையில் மீனவர்கள் கரை திரும்பாததைத் தொடர்ந்து கீழே வைப்பார் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவின் கீழ் மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் இணைந்து கடலோர காவல் படை கப்பலும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நகராட்சி இடத்தில் மரம் வளர்ப்பதில் தகராறு; எதிர்வீட்டு பெண்ணின் ஸ்கூட்டருக்கு தீ வைத்த நபர் கைது

இந்நிலையில் இன்று காலை நடுக்கடலில் கவிழ்ந்த பைபர் படகை பிடித்துக் கொண்டு  தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை நாட்டுப் படகில் தேடிசென்ற மீனவர்கள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட மீனவர்கள் கரைக்கு கொண்டுவரப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios