சிறுவர் பூங்காவில் நண்பர்களுடன் விளையாடிய சிறுவனுக்கு மின் கம்பம் வடிவில் வந்த எமன்; உறவினர்கள் கதறல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுவர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

13 year old boy killed power shock at children park in thoothukudi district vel

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான் பாளையம் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மனோஜ் குமார் (வயது 13). இவர் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மனோஜ் குமார் தனது நண்பர்களுடன் விளாத்திகுளம் அம்பாள் நகரில் அமைந்துள்ள "முத்துப்பூங்காவிற்கு" விளையாடச் சென்றுள்ளார். அப்போது பூங்காவில் இருந்த மின்விளக்கு கம்பத்தை சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருந்தபோது மனோஜ் குமார் மின்விளக்கு கம்பத்தை தொட்டதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. 

மதுரையில் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி; போலீஸ் விசாரணை

மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் மனோஜ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல்துறையினர் உடனடியாக பூங்காவிற்குச் சென்று அங்கிருந்த மற்ற சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை பத்திரமாக பூங்காவில் இருந்து வெளியேறச் செய்து விளாத்திகுளம் மின்வாரிய பணியாளர்களை வரவழைத்து அந்த மின்விளக்கு கம்பத்தை சோதனையிட்டதில் கம்பத்தின் மீது உயர் அழுத்தம் கொண்ட மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரியவந்தது. 

புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடற்கரையில் இறங்கிய 4 மாணவர்கள் சலடமாக மீட்பு

மேலும் உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளாத்திகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விளாத்திகுளம் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த "முத்து பூங்காவில்" முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததும், பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியமும் தான் 13 வயது சிறுவன் மனோஜ் குமாரின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிகளவில் சிறுவர்கள் வந்து செல்லும் இந்த பூங்காவை முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வந்த பேரூராட்சி பணியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவர் மீதும் ஒட்டுமொத்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios