Asianet News TamilAsianet News Tamil

பழைய இரும்பு கடையில் புகுந்து திருட்டு; இந்து மக்கள் கட்சி செயலாளர் உள்பட 13 பேர் அதிரடி கைது

இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் உள்பட 13 பேர் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 persons arrested who are all involved in theft case in old steel godown in thoothukudi
Author
First Published Aug 11, 2023, 12:30 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் அங்கப்பன். இவரது மகன் முத்தையா (வயது 51). இவரது அண்ணனின் பழைய இரும்பு குடோன் சிங்காநல்லூர் வெள்ளலூர் சாலையில் உள்ளது. அவரது அண்ணனின் நிறுவனத்தில் முத்தையா ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இரும்பு குடோனில் இருக்கும் அறையில் பேச்சி முத்து என்பவருடன் சில சமயம் முத்தையா தங்குவது வழக்கம். முத்தையாவின் அண்ணன் குடோன் உரிமையாளரிடம், இடத்தை வாங்குவதற்காக 50 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் முத்தையாவின் அண்ணன் பல மாதங்கள் ஆகியும் இடத்தை கிரையம் செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடோனுக்குள் முத்தையாவும், பேச்சி முத்துவும்  உறங்கிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் மர்ம நபர்கள் குடோனின் பூட்டை உடைத்தனர். சத்தம் கேட்டு திடுக்கிட்டு முத்தையா எழுந்தார். அப்போது பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் முத்தையாவும், பேச்சிமுத்துவும் தங்கியிருந்த அறைக்குள் புகுந்துள்ளனர். அவர்களை மிரட்டி செல்போனை பறித்துள்ளனர். பின்னர், முத்தையா மற்றும் பேச்சிமுத்துவின் கை, கால்களை கட்டி அறைக்குள் அடைத்தனர்.  

காதலனுடன் பேசிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை; திருப்பூரில் பயங்கரம்

இதைத் தொடர்ந்து, டிராக்டர் மற்றும் வேன்களில் குடோனில் வைக்கப்பட்டிருந்த ஆறு டன் எடையுள்ள பழைய அலுமினியம், செம்பு, இரும்பு உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. . மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களையும் ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் இடத்தை காலி செய்யாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலை குடோனுக்கு சென்ற முத்தையாவின் சகோதரர் அதிர்ச்சி அடைந்தார். முத்தையா மற்றும் பேச்சிமுத்துவின் கை, கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டுள்ளார். இதையடுத்து, முத்தையா சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடக்கப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; அரசுப்பள்ளி ஆசிரியர் அதிரடி கைது

விசாரணையில் சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பிரபு என்ற காலனி பிரபு (36), திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் கண்ணன் (30 ), திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஜ்மத் அலி, மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முருகனின் மகன் வீரபாரதி (21), மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த ஜஸ்டின் மகன் பென்னி (19) மதுரை பைகாராவைச் சேர்ந்த ரங்கராஜன் மகன் மனோஜ் குமார்(19), மதுரை தோப்புக்காலனியைச் சேர்ந்த ஐயாவு மகன் வீரய்யா என்ற புலி (27 ), மதுரை கனகவேல் காலனி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பார்த்தசாரதி( 16), மதுரை வசந்த் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன்  மகன் பிரபு என்ற வெள்ளையன் (24), மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சங்கர் கணேஷ் என்ற  சங்கர் (24), ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த முத்துராமன் மகன் பாலமுருகன் (26 ), மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த ரமேஷ் மகன் முகேஷ்( 22 ), மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி(  19 )ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களின் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பல வழக்குகள் விசாரணையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios