அதிரடியாக ரத்து செய்யப்பட்ட சுங்கவரி கட்டணங்கள்..! மாவட்ட ஆட்சியரின் உத்தரவில் மிரண்டு போன அதிகாரிகள்..!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் தொடங்குவதால் 10 நாட்களுக்கு வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்க வரிகட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். உலகப்பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இந்த வருடத்திற்கான திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கார்த்திகை தீபத்திருநாள் டிசம்பர் 10ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதை காணப்பதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்தநிலையில் தீபத்திருவிழாவையொட்டி வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்க வரிகட்டணத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் தொடங்குவதால் 10 நாட்களுக்கு வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்க வரிகட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார். மீறி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.