உறவுமுறைகளை கடந்த காதல்... அண்ணனை திருமணம் செய்து கொண்ட தங்கை..!

அண்ணன் உறவுமுறை கொண்ட இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

Relationships past love ... brother who married his brother

அண்ணன் உறவுமுறை கொண்ட இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணால் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
நாட்றம்பள்ளி அடுத்த அன்சாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் இவருடைய மகன் ரத்தினகுமார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் பிரீத்தா. Relationships past love ... brother who married his brother

ரத்தினகுமாரும், பிரீத்தாவும் சிறுவயது முதலே ஒருவருக்கொருவர் நட்போடு பழகி வந்துள்ளனர். இந்த நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மலர்ந்துள்ளது. எல்லா காதல் ஜோடிகளையும் போலவே இவர்களது காதலுக்கும் உறவினர்களால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லா காதலுக்கும் ஒவ்வொரு காரணம் இருந்தாலும் இவர்கள் காதலுக்கு எழுந்த எதிர்ப்பு வித்தியாசமானது.  ரத்தினகுமாரும், பிரீத்தாவும் அண்ணன் - தங்கை உறவுமுறை கொண்டவர்கள் என்பதே இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப காரணம். Relationships past love ... brother who married his brother

ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். காவல்நிலையத்தில் வைத்து உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் காதல் ஜோடியை அனுப்பிவைத்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தங்கை உறவுமுறை கொண்ட இளம்பெண்ணும், இளைஞரும் காதல் திருமணம் செய்துகொண்டது அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கி உள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios