Asianet News TamilAsianet News Tamil

பிரபல சைவ ஹோட்டலில் வாங்கிய பீட்ரூட் பொரியலில் எலி தலை; அதிர்ச்சி வீடியோ வைரல்!!

சமீபகாலமாக கெட்டுப்போன கூல்ட் ரிங்ஸ் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர் கதையாக இருந்து வருகிறது. சவர்மா, பிரியாணி, சாப்பாட்டில் கரப்பான் பூச்சி, பல்லி போன்ற உணவுகளாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். 

Rat head in beetroot fries bought from a famous vegetarian hotel..!
Author
First Published Sep 12, 2022, 9:39 AM IST

ஆரணியில் பிரபல சைவ உணவகத்தில் வாங்கிச் சென்ற சாப்பாட்டு பொரியலில் எலி தலை இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சமீப காலமாக கெட்டுப்போன கூல் ரிங்ஸ் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்ட குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர் கதையாக இருந்து வருகிறது. சவர்மா, பிரியாணி, சாப்பாட்டில் கரப்பான் பூச்சி, பல்லி போன்ற உணவுகளாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவ்வப்போது அதிகாரிகள் சோதனை செய்தாலும் அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

இதையும் படிங்க;- ஆசை ஆசையாய் காத்திருந்த மணம்பெண்.. இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை.!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாஜி பவன் என்ற சைவ உணவகத்தில் காந்தி நகரை சேர்ந்த முரளி என்பவர் துக்க நிகழ்வுக்காக சாப்பாடு ஆர்டர் கொடுத்திருந்தார். அந்த ஹோட்டலில் அனுப்பப்பட்ட சாப்பாட்டை 30க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பீட்ரூட் பொரியலில் எலித் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து, எலி தலையுடன் முரளியின் உறவினர்கள் ஹோட்டலுக்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது, 6 மணி நேரத்திற்கு முன்பு உணவு அனுப்பியதாகவும், 6 மணி நேரத்திற்குப் பிறகு எலி தலை இருப்பதாக கூறுவது முறையல்ல என ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் சமரசம் பேசி, உணவு பாதுகாப்புத்துறை ஆய்வுக்காக உணவை எடுத்து சென்றனர். அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட முரளி ஹோட்டல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க;-  ரன்னிங் போது வெடித்த கார் டயர்! எதிர் திசையில் சென்று அரசு பேருந்து மீது மோதல்.. 4 பேர் ரத்த வெள்ளத்தில் பலி.!

Follow Us:
Download App:
  • android
  • ios