ரன்னிங் போது வெடித்த கார் டயர்! எதிர் திசையில் சென்று அரசு பேருந்து மீது மோதல்.. 4 பேர் ரத்த வெள்ளத்தில் பலி.!
திண்டுக்கல் அருகே அரசு பேருந்து- கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் அருகே அரசு பேருந்து- கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலிருந்து செம்பட்டி நோக்கி இன்று காலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, தூத்துக்குடியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்த கார் கன்னிவாடி அடுத்த பண்ணப்பட்டி என்ற இடத்தில் கார் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதையும் படிங்க;- கோவையில் 90 அடி கிணற்றில் தலைக்குப்புற விழுந்த கார்...! நீரில் மூழ்கி 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி
இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி எதிரே அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- மாணவர்கள் ஆயுதங்களை எடுத்தால் சிறைக்கு அனுப்புவோம்..! காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை