மாணவர்கள் ஆயுதங்களை எடுத்தால் சிறைக்கு அனுப்புவோம்..! காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னையில் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் கொலைகள் குறைந்து உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
 

Chennai Police Commissioner has warned that students will be arrested if they engage in violence

விபத்தை குறைக்க நடவடிக்கை

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் போக்குவரத்து வார்டன் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சென்னையில் 104 இடங்களில் அதிக விபத்துகள்  நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். அந்த இடங்களில் விபத்துகளை குறைக்க விபத்து குறித்து போக்குவரத்து போலீசார், சென்னை மாநகராட்சி, சென்னனை ஐஐடி ,இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து அதன்பின் அந்த பகுதியில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறினார்.  விபத்தை குறைக்க  முதல்வர் உத்தரவு படி தனி குழு அமைத்து உள்ளதாகவும் தெரிவித்தார். 

திமிங்கல வாந்தியை கடத்திய 4 பேர் கைது… ரூ.10 கோடி மதிப்பிலான திமிங்கல வாந்தி பறிமுதல்!!

Chennai Police Commissioner has warned that students will be arrested if they engage in violence

மாணவர்களுக்கு எச்சரிக்கை

 தேசிய குற்ற ஆவன காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக வெளியான தகவலுக்கு பதில் அளித்த சங்கர் ஜிவால், உலகில் குற்றங்கள் அங்கு அங்கு நடைபெற்று தான் வருகிறது.  குற்றத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் அந்த வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  சென்னையில் 20% கொலைகள் குறைந்துள்ளதாக தெரிவித்தார். மாவா, குட்கா, போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுத்து அதனை பறிமுதல் செய்து உள்ளதாகவும் கூறினார். வன்முறையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி வருகிறோம் அதையும் மீறி மாணவர்கள் ஆயுதங்களை எடுத்தால் சிறைக்கு அனுப்புவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.  

இதையும் படியுங்கள்

3 மாத புலிக்குட்டி வேணுமா.. அப்படினா 25 லட்சம் கொடுங்க.. ஸ்டேட்டஸ் வைத்து தனக்கு தானே ஆப்பு வைத்த இளைஞர்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios