திமிங்கல வாந்தியை கடத்திய 4 பேர் கைது… ரூ.10 கோடி மதிப்பிலான திமிங்கல வாந்தி பறிமுதல்!!

திமிங்கல வாந்தி கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் லக்னோவில் கைது செய்யப்பட்டதாக உத்தரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. 

upstf arrested 4 members of a gang who were trafficking whale vomit

திமிங்கல வாந்தி கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் லக்னோவில் கைது செய்யப்பட்டதாக உத்தரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் காவல்துறையினர் சோதனையில் திமிங்கல வாந்தி கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் பிடிப்பட்டனர். அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 4.12 கிலோகிராம் திமிங்கல வாந்தியை பறிமுதல் செய்தனர். மேலும் அதன் மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. 1972 ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் திமிங்கல வாந்தியை விற்பனை செய்வதைத் தடைசெய்தது. ஆனால் இது வாசனை திரவியங்களில் பயன்படுத்தப்படுகிறது. Sperm whales எனப்படும் எண்ணெய்த் திமிங்கிலங்கள் திமிங்கல வாந்தியை உருவாக்குகின்றன.

இதையும் படிங்க: காரின் பின்சீட்டில் அமர்பவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்! : மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

upstf arrested 4 members of a gang who were trafficking whale vomit

இது "சாம்பல் அம்பர்" மற்றும் "மிதக்கும் தங்கம்" என்றும் அழைக்கப்படுகிறது, இது உலகின் விசித்திரமான இயற்கை நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இந்த திடமான, மெழுகு போன்ற பொருள் தங்கத்தை விட விலை அதிகம் என்பதால் இது அடிக்கடி கடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, சட்டவிரோதமாக அம்பர்கிரிஸ் (திமிங்கல வாந்தியை) விற்பனை செய்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூலை மாதம், 28 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல வாந்தியை கேரளாவில் மீனவர்கள் ஒரு குழுவினர் கண்டதாகவும், அதை உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி வைரலானதை அடுத்து, இதற்காக அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.

இதையும் படிங்க: பட்டர் மசாலா தோசை சாப்பிடுங்க! பெங்களூரு பாஜக எம்.பி. தேஜஸ்வியால் நெட்டிஸன்கள் கொந்தளிப்பு

ஆம்பெர்கிரிஸ் என்றால் என்ன? ஏன் இது விலை உயர்ந்ததாக உள்ளது?

Sperm whales எனப்படும் எண்ணெய்த் திமிங்கலங்களின் செரிமான அமைப்பில் ஆம்பெர்கிஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. இது திமிங்கலத்தின் குடலில் தயாரிக்கப்படும் மெழுகு, திடமான, எரியக்கூடிய பொருளாகும். இது அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் திமிங்கல வாந்தி என்று அழைக்கப்படும் ஆம்பெர்கிரிஸ் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதன் சரியான தோற்றம் நீண்ட காலமாக ஒரு மர்மமாகவே உள்ளது. பழங்காலத்திலிருந்தே, அம்பர்கிரிஸ் வாசனை திரவியங்கள் மற்றும் உயர்தர வாசனை திரவியங்கள் மற்றும் பல்வேறு பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் இது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு மும்பை காவல்துறை அளித்த மதிப்பீட்டின்படி,1 கிலோ அம்பர்கிரிஸ் ரூ.1 கோடி மதிப்புடையது. இதன் காரணமாக, இது "மிதக்கும் தங்கம்" என்று குறிப்பிடப்படுகிறது. எகிப்தியர்கள் இதை தூபமாகப் பயன்படுத்தினர், சீனர்கள் அதை "டிராகனின் எச்சில் வாசனை" என்று அழைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios