bangalore floods: பட்டர் மசாலா தோசை சாப்பிடுங்க! பெங்களூரு பாஜக எம்.பி. தேஜஸ்வியால் நெட்டிஸன்கள் கொந்தளிப்பு
பெங்களூரு நகரமே தண்ணீரில் மூழ்கி தத்தளித்து வரும்போது, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஒரு ஹோட்டலில் பட்டர் மசாலா தோசை சாப்பிட்டு மக்களையும் சாப்பிட அழைக்கும் வீடியோ நெட்டிஸன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு நகரமே தண்ணீரில் மூழ்கி தத்தளித்து வரும்போது, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஒரு ஹோட்டலில் பட்டர் மசாலா தோசை சாப்பிட்டு மக்களையும் சாப்பிட அழைக்கும் வீடியோ நெட்டிஸன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மிககனமழை பெய்துவருகிறது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஏராளமான வீடுகள், வர்த்தக கட்டிடங்கள், தண்ணீர்மூழ்கியுள்ளன. சொகுசு கார்கள்அனைத்தும் தண்ணீரில் ஊறி வருகின்றன.
மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறி அரசின் நிவாரண முகாம்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வசிக்கிறார்கள். இந்நிலையில் பெங்களூரு தெற்கு மக்களவை எம்.பி.யும் பாஜக தேசிய யுவமோர்ச்சா தலைவரான தேஜஸ்வி சூர்யா பேசி வெளியிட்ட வீடியோ மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
40 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் தேஜஸ்வி சூர்யா பத்மநாபா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் “பட்டர் மசாலா தோசை மற்றும் உப்மா சாப்பிட்டுக்கொண்டே ஹோட்டலின் சுவையை புகழ்ந்துபேசியுள்ளார். அனைத்து மக்களும் இந்த ஹோட்டலில் வந்துசாப்பிடுமாறு அழைத்துள்ளார்.
பெங்களூரு நகரமே வெள்ளத்தால் மூழ்கியிருக்கும்போது எம்.பி. ஒருவர் மக்களின் பிரச்சினைகளை அறியாமல் பேசுவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய சமூகஊடக ஒருங்கிணைப்பாளர் லாவண்யா பலால் இந்தவீடியோ வெளியிட்டு பழைய வீடியோ அல்ல, கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்ட வீிடியோ என்றுட்விட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த 5ம் தேதி பெங்களூரு நகரமே வெள்ளத்தில் தத்தளித்திருந்தது.
ட்விட்ரில் லாவண்யா கூறுகையில் “ தேஜஸ்வி பேசும் வீடியோகடந்த 5ம் தேதிஎடுக்கப்பட்டது. பெங்களூரு நகரமே தண்ணீரில் மூழ்கியபோது, தேஜஸ்வி ருசியாக காலை உணவு சாப்பிட்டுக்கொண்டு புகழ்ந்து பேசியுள்ளார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேஜஸ்வி சூர்யா சென்று நிவாரணப்பணியில்ஈடுபட்டாரா?. யாராவது தேஜஸ்வி சூர்யா குரலைக் கேட்டீர்களா, அவரின் சகாக்களைப் பார்த்தீர்களா “ எனக் கேட்டுள்ளார்
சூர்யாவின் வீடியோவை நெட்டிஸன்கள் ஏராளமானோரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ரம்யாவும் பகிர்ந்துள்ளனர்.
தொடரும் கனமழை… மஞ்சல் அலர்ட் எச்சரிக்கை… வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்… என்ன ஆகுமோ பெங்களூர்!!
நெட்டிஸன் ஒருவர் பதிவிட்ட கருத்தில் “ உணவுவிரும்பி தேஜஸ்வி சூர்யா, நீங்கள் ஹோட்டலை விளம்பரப்படுத்த விரும்பினால், வாக்காளர்களுடன் சென்று காபி சாப்பிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆம்ஆத்மி கட்சிநிர்வாகி பிரித்விரெட்டி கூறுகையில் “ ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது, நீரோ மன்னன் பிடில்வாசித்தார். பெங்களூரு நகரம் தண்ணீரில் தத்தளித்தபோது, தேஜஸ்வி தோசையை புகழ்ந்து, மக்களைக் கிண்டலடித்துள்ளார். மக்களே இந்த வீடியோவை நினைவில் வைத்து, அடுத்துமுறை வாக்களிக்கும்போது பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
சூர்யாவை கடுமையாகத் தாக்கி நெட்டிஸன்ஒருவர் பதிவிட்ட கருத்தில் “ எம்.பி பெயர் தேஜஸ்வி சூர்யா, தொகுதி பெங்களூரு தெற்கு.கெஜ்ரிவால் பற்றி கடந்த 3 நாட்களில் 240 ட்வீட், ராகுல் காந்தி குறித்து 17 ட்வீட், இந்திரா காந்தி, நேரு குறித்து 55 ட்வீட், மோடியைப் புகழ்ந்து 137ட்வீட், பெங்களூரு வெள்ளம் பற்றி ஒன்றுமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தேஜஸ்வி சூர்யா மிஸ்ஸிங் என்றவார்த்தையும் டிரண்டாகி வருகிறது. பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள். சதானந்தா கவுடா, பிசி மோகன், சூர்யா குறித்து மக்கள் கேள்விகளால் துளைத்து எடுக்கிறார்கள்.