Bangalore floods: பெங்களூரு வெள்ளத்தில் மிதக்கும் கோடீஸ்வரர்களின் சொகுசு பங்களாக்கள்: சிஇஓக்கள் படகில் மீட்பு
பெங்களூருவில் பெய்து வரும் பேய் மழையில் கோடீஸ்வரர்களின் சொகுசு வீடுகள், பல பெரிய நிறுவனங்களின் சிஇஓக்களின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த கோடீஸ்வர்ரகளையும், சிஇஓக்களையும் படகுமூலம் போலீஸார் மீட்டுள்ளனர்.
பெங்களூருவில் பெய்து வரும் பேய் மழையில் கோடீஸ்வரர்களின் சொகுசு வீடுகள், பல பெரிய நிறுவனங்களின் சிஇஓக்களின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த கோடீஸ்வர்ரகளையும், சிஇஓக்களையும் படகுமூலம் போலீஸார் மீட்டுள்ளனர்.
பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. ஒரே நாள் இரவில் 130மில்லிமீட்டர் மழை பதிவானதால் நகரே வெள்ளத்தில் மிதக்கிறது.
பெங்களூரு வெள்ளம்:கர்நாடகாவில் மழை கொட்டித் தீர்க்க காரணம் என்ன?
தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது, இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். நீர் மட்டம் அதிகமான பகுதிகளில் மக்கள் படகுமூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூருவில் 130 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் பெங்களூருவைவிட்டு மக்கள் வெளியேறமுடியாத வகையில் வெள்ளக்காடாக நகரம் காட்சியளிக்கிறது. மத்திய பெங்களூரிவில் இருந்து 13 கி.மீ தொலைவில் இருக்கும் பகுதி எப்சிலன்.
இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளவீடுகள் அனைத்தும் நகரின் முக்கிய விஐபிக்கள், கோடீஸ்வரர்கள், பெருநிறுவனங்களின் சிஇஓக்கள் ஆகியோருடையதாகும். இங்கு பெரும்பாலும் உயர்வகுப்பினர், கோடீஸ்வர்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள்.எப்சிலன் பகுதியைச் சேர்ந்தவர் என்றாலே பெங்களூருவில் தனி மரியாதை உண்டு.
பெங்களூரு வெள்ளம்:கர்நாடகாவில் மழை கொட்டித் தீர்க்க காரணம் என்ன?
எப்சிலன்பகுதியில் ஒரு வீட்டில் விலை குறைந்தபட்சம் ரூ10 கோடியாகும். இங்கு அதிகபட்சமாக ரூ.80 கோடிக்குவரை வீடு இருக்கிறது. ஆனால், இப்போது வீடுகள் அனைத்தும் சமரசம் இல்லாமல் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன.
ஆனால், இந்த மழைால் எப்சிலன் பகுதியில் கட்டப்பட்ட பல சொகுசு பங்களாக்கள்,வீடுகள் தண்ணீர் மூழ்கியுள்ளன. குறிப்பாக விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, பைஜூஸ் நிறுவனத்தின் சிஇஓ ரவிந்திரன், பிரிட்டானியா சிஇஓ வருண் பெரி, பிக் பாஸ்கெட் நிறுவனர் அபினய் சவுத்ரி, பேஜ் இன்டஸ்ட்ரீஸ் மேலாண் இயக்குநர் அசோக் ஜெனோமோல் ஆகியோரின் வீடுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்தப் பகுதியில் உள்ள 150க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் செல்ல முடியாத வகையில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பெங்களூருவில் ரூம் வாடகை ரூ.40ஆயிரமாம்! இன்னும் 3 நாட்களுக்கு மழையா!மக்கள் பீதி
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மின்சாரமும் இல்லை, வெளியேற வசதியும் இல்லை. திங்கள்கிழமை எப்சிலன் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து, தாங்கள் ஆபத்தில் இருப்பதைத் தெரிவித்தனர். இதையடுத்து, படகு மூலம் மீட்புப்படையினர் சென்று எப்சிலன் பகுதியில் வசித்த பல்வேறு வீடுகளில் தங்கியிருந்த கோடீஸ்வரர்கள், பெருநிறுவனங்களின் சிஇஓக்களை மீட்டனர்.