ஆசிரியையுடன் உல்லாசம்... திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு இறுதியில் நேர்ந்த கொடூரம்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கிராம பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (28) என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது பிரபாகரன், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
ஆரணி அருகே ஆசிரியையிடம் உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கிராம பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (28) என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது பிரபாகரன், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால், அந்த இளம்பெண் கர்ப்பமானார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரபாகரனை போக்சோ சட்டத்தில் கைது விசாணை நடத்தி வருகின்றனர்.