பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் பயங்கரம்... ஒரே சேலையில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை... கதறி துடித்த உறவினர்கள்..!
ஆந்திரா மாநிலம் சித்தூர் அடுத்த குந்தவாழுரை சேர்ந்தவர் தேவராஜ் (22), கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (19). இருவரும் கடந்த சில ஆண்டாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெங்களூரில் தங்கியிருந்து தேவராஜ் கார் ஓட்டி வந்தார்.
ஆரணி அருகே பொங்கல் கொண்டாட வந்த புதுமண தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் அடுத்த குந்தவாழுரை சேர்ந்தவர் தேவராஜ் (22), கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (19). இருவரும் கடந்த சில ஆண்டாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெங்களூரில் தங்கியிருந்து தேவராஜ் கார் ஓட்டி வந்தார்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கருங்காலி குப்பம் சமத்துவபுரத்தில் வசித்து வரும் தேவராஜின் சித்தி சந்திரா வீட்டிற்கு இருவரும் வந்தனர். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் விரக்தியில் இருந்து வந்தனர். இதனையடுத்து, காதல் தம்பதியினர் இருவரும் நேற்று இரவு வீட்டு முன்பு இருந்த மரத்தில் ஒரே சேலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான சில மாதங்களிலேயே புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.