Asianet News TamilAsianet News Tamil

டாக்டர் சீட்டு வாங்கி தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி; பெண் தீ குளிக்க முயற்சி

மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி. புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தற்கொலை முயற்சி.

woman try to commit suicide in tiruppur district collector office
Author
First Published Apr 17, 2023, 3:32 PM IST | Last Updated Apr 17, 2023, 3:32 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் தன செல்வன். இவர் சென்னை மத்திய தூல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று உள்ளார். இவரது மனைவி விமலா. இவர்களது மகனுக்கு சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டா எம்பிபிஎஸ், சீட் வாங்கி தருவதாக கூறி கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ்எல்ஆர் டூட்டி பெய்டு ஷாப் நடத்தி வந்த பிர்தோஸ் அலாவுதீன் என்பவர் கடந்த  2019ம் ஆண்டு  ரூ.23 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுள்ளார்.

ஆனால் உறுதி அளித்தபடி மருத்துவ படிப்புக்கு சீட்டு வாங்கித் தராமல் வெகு நாட்களாக அலைக்கழித்து ஏமாற்றியுள்ளார். இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையம், ஐஜி அலுவலகம், ஆணையாளர் அலுவலகம், முதலமைச்சர் செல் பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காநல்லூர் காவல் நிலையம் என அனைத்திலும் தொடர்ந்து மூன்று வருடங்களாக புகார்  கொடுத்துள்ளார்.

கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் சோகம்; உள்ளூர் வாகனம் விபத்துக்குள்ளாகி பெண் பலி

புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனவேதனை அடைந்த  பியூலா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி மேற்கொண்டார். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்கொலை முயற்சி மேற்கொண்ட. பெண்ணை காவல்நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் சிசு மண்ணில் புதைத்து கொலை; குடிகார தாயின் கொடூர செயலால் அதிர்ச்சி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios