கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் சோகம்; உள்ளூர் வாகனம் விபத்துக்குள்ளாகி பெண் பலி
நீலகிரி மாவட்டம் உதகை கல்லட்டி மலைப்பாதையில் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் வாகனத்தில் சென்ற பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை கல்லட்டி மலை பாதையில் நேற்று மதியம் கார் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் குன்னூர் அருகே உள்ள தூதுர்மட்டம் கெரடாலீஸ் பகுதியைச் சேர்ந்த விஜயா (வளது 50) மற்றும் அவரது மகன்கள் வினித், தரணிஷ் ஆகியோர் ஒரு காரிலும் அவரது உறவினர்கள் மற்றொரு காரிலும் மசனகுடி அருகே உள்ள பொக்காபுரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய கல்லட்டி வழியாக இறங்கியபோது அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது,
இதில் படுகாயமடைந்த விஜயா உதகை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற பின் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மூன்று பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான கார் தடுப்பு வேலியில் முட்டி நின்றதால் உடன் பயணித்த மேலும் மூன்று பேர் உயிர் தப்பினர். தற்போது விஜயாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, விபத்து தொடர்பாக புதுமந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் சிசு மண்ணில் புதைத்து கொலை; குடிகார தாயின் கொடூர செயலால் அதிர்ச்சி
கல்லட்டி மலைப்பாதை மிகவும் செங்குத்தானதாகவும் 30க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகவும் உள்ளது. எனவே காவல்துறையினர் மற்றும் கல்லட்டி வனத்துறை சோதனை சாவடியில் உள்ளூர் வாகனங்களை மட்டுமே அனுமதிக்கும் நிலையில் நேற்று உள்ளூர் வாகனம் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கல்லட்டி மலை பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி அனுப்ப வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஸ்டாலின் அதிகம் பேசினால் அரசாங்கம் கலைந்துவிடும் - எச்.ராஜா எச்சரிக்கை