திருப்பூர் குமரன் சிலைக்கு பட்டையடித்த பாஜக வேட்பாளர்; பாஜகவினரின் செயலால் பரபரப்பு

திருப்பூரில், தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு திருநீறு பட்டை போட்டு மாலை அணிவித்து பரப்புரையை துவக்கியது மட்டும் இன்றி உள்பனியன் அணிந்து கையில் நூல்கண்டு, பெட்ஷீட்டுடன் சீர்வரிசை போல் ஏந்தி வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்த பாஜக வேட்பாளர்.

There was commotion in Tirupur as more than 10 people came to file nomination with the BJP candidate vel

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர்  முருகானந்தம், திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மனு தாக்கல் செய்வதற்காக திருப்பூர் குமரன் சிலைக்கு சென்றார். அப்போது தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு பாஜகவினர் நெற்றியில் திருநீறு பூசி, மாலை அணிவித்து பரப்புரையை துவக்கினர்.  தியாகி சிலைக்கு திருநீர் பட்டை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பங்குனி உத்திரம்; அண்ணாமலையார் ஆலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்

தொடர்ந்து வேட்பு மனு  தாக்கல் செய்ய வரும் வழியில் திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட உள் பனியன்  அணிந்தவாறு, திருப்பூரில் பின்னலாடை தொழில் நலிவடைந்து விட்டதாகவும்,  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயன் பின்னலாடை தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க  நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தவறிவிட்டதாக கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டவாறு வேட்பமான தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். 

புதுவைக்கு ஒரு மத்திய அமைச்சர் வேண்டும் என நாம் உரிமையுடன் கேட்க வேண்டும்; அதற்கு நமசிவாயம் வெற்றி பெற வேண்டும் - முதல்வர் ரங்கசாமி

அங்கு  பனியன் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கையில் நூல்கண்டுடன் தட்டில் போர்வையை வைத்து சீர்வரிசை போல் கேட்கும் பொழுது தாக்கல் செய்ய எடுத்து வந்திருந்தார். இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பாஜகவினர் 10க்கும் மேற்பட்டோர் தங்களையும் உள்ளே விட வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios