பங்குனி உத்திரம்; அண்ணாமலையார் ஆலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்

பங்குனி உத்திர தினமான இன்று அண்ணாமலையார் திருக்கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற அண்ணாமலையார் திருக்கல்யாண வைபவம்.

thirukalyanam event held well at annamalaiyar temple in thiruvannamalai vel

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பங்குனி உத்திர தினமான இன்று பங்குனி உத்திர நட்சத்திரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக இன்று அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று கற்கள் பதித்த ஆபரணங்கள் சூட்டி வண்ண வண்ண மாலைகளை கொண்டு மாலைகள் சாற்றி அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் தனித்தனியே திருக்கோவில் கொடிமரம் அருகே அமைந்துள்ள சம்பந்த விநாயகர் ஆலயம் முன்பு எழுந்தருளினர்.

ஆன்மிகமும், அரசியலும் பிரிக்கக் கூடாதவை; மருதாச்சல அடிகளாரிடம் ஆசிபெற்ற பின் அண்ணாமலை பேட்டி

தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு இரவு மாலை மாற்றும் வைபவமும், பூப்பந்து மாற்றும் நிகழ்வும் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் பின்னர் ஆனந்த தாண்டவம் ஆடி இருவரும் திருக்கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள சிவாச்சாரியார்கள்  யாகங்கள் வளர்த்து வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்கள் அரோகரா கோஷமிட அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

தேர்வுக்கட்டணம் என்ற பெயரில் மாணவர்களிடமே கொள்ளையடிப்பதா? சுந்தரனார் பல்கலை.க்கு எதிராக அன்புமணி ஆவேசம்

தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு பஞ்ச கற்பூர ஆரத்தியும், நட்சத்திர ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது. அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்ற இந்த திருமண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios