திருப்பூர் அருகே பயங்கர விபத்து; தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த கட்டிட தொழிலாளி; சிசிடிவி காட்சி வைரல்!!
பல்லடம் அருகே காளிவேலம்பட்டியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கட்டிட தொழிலாளி தூக்கி வீசப்பட்டு பலியானார். இந்த் கோர சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் சுரேஷ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் பல்லடம் அருகே காளிவேலம்பட்டி பிரிவில் பணியை முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது, திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோவையைச் சேர்ந்த நாகராஜ் தனது இரண்டு வயது மகன் வர்ஷன் மற்றும் அவரது சகோதரர் விக்னேஷ் ஆகியோருடன் மதுரையில் இருந்து கோவை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.
68 வயது மூதாட்டி கதற கதற கற்பழித்து கொலை; காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை
சுரேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது எதிரே வந்த நாகராஜின் கார் மோதி தூக்கி வீசப்பட்டார். சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் நாகராஜின் இரண்டு வயது மகனும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.. ஏன்? எதற்கு? எத்தனை நாள்? முழு விபரம் இதோ !!