Asianet News TamilAsianet News Tamil

பா.ஜ.க.வுக்கு கொ.மு.க. ஆதரவு: பெஸ்ட் ராமசாமியைச் சந்தித்து நன்றி தெரிவித்த அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருப்பூரில் உள்ள கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பெஸ்ட் ராமசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Annamalai thanked Ramasamy after extending support for BJP sgb
Author
First Published Mar 17, 2024, 4:34 PM IST

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருப்பூரில் உள்ள அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பெஸ்ட் ராமசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆதரிப்பதாக அறிவித்தது அடுத்து அதன் நிறுவனர் பெஸ்ட் ராமசாமி திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது:

நாட்டின் பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் மக்களை சந்திப்பது ஜனநாயகம்சாலை வழியாக மக்களை சந்தித்து மக்களின் ஆசி வாங்குவதற்காக பிரதமர் வருகிறார். பொதுமக்கள் அனைவருமே உற்சாகத்தோடு பங்கேற்பார்கள்.

நாலு மணிநேரத்தில் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளோம். கோவையில் பிரதமர் சந்திப்பு நிகழ்வை திமுக தடை விதிக்க நினைக்கிறது. எல்லா மாநிலத்திலும் பிரதமர் மக்களை சந்திக்கிறார். போதை பொருள் தடுப்புநடவடிக்கை எடுக்க மாநில அரசு முற்றிலும் தவறிவிட்டது. வருகின்ற தேர்தலில் இது எதிரொலிக்கும்.

ஊழல் பேர்வழிகளை புறம் தள்ளி நம்பிக்கையுடன் மக்களைச் சந்திக்கிறோம்: அண்ணாமலை

Annamalai thanked Ramasamy after extending support for BJP sgb

பிரதமர் கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகத்திற்கு தொடர்ந்து வருகை புரிகிறார். அவையெல்லாம் தேர்தலை மனதில் வைத்து அல்ல. பிரதமர் வருகையை குற்றம் சாட்டும் திமுக முதல்வரை தினமும் நகர்வலம் வர சொல்லலாமே. 24 மணிநேரமும் பிரதமர் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். எனவே பிரதமர் வருகையை தேர்தல் தேதியோடு ஒப்பிடுவது தோல்விக்கு எதிர்கட்சிகள் காரணத்தை இப்போதே தேடிவிட்டதாக தெரிகிறது.

பி எம்ஸ்ரீ பள்ளி திட்டத்திற்கு கையெழுத்து போடுவார்கள் ஆனால் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என சொல்வது ஏற்கத்தக்கதல்ல. தேர்தல் முடிந்ததும் வேறு காரணம் சொல்லி ஏற்றுக்கொள்வர். ஆ. ராசா 2ஜி வழக்கு ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில்  தீர்ப்பு வரலாம்.  அதன் பிறகு நான் சொன்னதை வைத்து முடிச்சு போடாதீர்கள்.

தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் மோடி  வருகை புரிய வேண்டும் என்பது எங்கள் விருப்பம் தேதி கொடுக்க பிரதமரும் தயாராக இருக்கிறார். விரைவில் திருப்பூருக்கு மோடி வருகை புரிவார் என எதிர்பார்க்கிறோம். இந்தியா கூட்டணிக்கு எங்கேயும் எழுச்சி இல்லை. ஜெய்ஸ்ரீராம் கோஷம்தான் எழுகிறது.

ஸ்பின்கிரிடிபிள் அஸ்வினுக்குப் பாராட்டு! ஒரு கோடி ரூபாய் செக்... 500 தங்கக்காசு... 100 வெள்ளிக்காசு!

Follow Us:
Download App:
  • android
  • ios