Asianet News TamilAsianet News Tamil

Watch: திருப்பூர் அருகே சிதறிய பீர் பாட்டில்கள்; அப்புறம் என்ன நடந்தது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!

திருப்பூர் அருகே பீர் பாட்டில் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் 25,200 பீர் பாட்டில்கள் சாலையில் சிதறின. பல்லகவுண்டம்பாளையம் பொதுமக்கள் அரண் அமைத்து யாரும் சிதறிய பாட்டில்களை எடுத்துச் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.  

Accident: Beer bottles scattered near Tirupur in Tamil Nadu
Author
First Published Jul 31, 2023, 4:05 PM IST

எரியிற தீயில.. பிடுங்குனது மிச்சம் என்ற பழமொழி உண்டு. அதாவது பல்வேறு ஊர்களில் நடக்கிற தீவிபத்து, சாலை விபத்துகளில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடிவிடுவார்கள். அதுவும் சரக்கு பாட்டில்கள் கவிழ்ந்தால் சொல்லவே வேண்டாம். ஆனால், சொல்லப்போகும் கதையைப் பாருங்கள். 

திருப்பூர் அருகே பல்லகவுண்டம்பாளையம் என்ற இடத்தில் லாரி கவிழ்ந்து ரோட்டில் பீர் பாட்டில்கள் சிதறின. பாட்டில்களை யாரும் எடுக்க விடாமல் அந்தப் பகுதி பொதுமக்கள் அரண் அமைத்து நின்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

கலைஞர் உரிமை தொகை: தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்!

செங்கல்பட்டு பீர் கம்பெனியில் இருந்து 25,200 பீர் பாட்டில்களை ஏற்றிய சரக்கு லாரி ஒன்று திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த பள்ளகவுண்ட பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. லாரியை பெரம்பலூர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (40) ஒட்டி வந்தார். சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பள்ளகவுண்டபாளையம் அருகே வந்தபோது லாரியை பேருந்து ஒன்று முந்திச் சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு லாரி  கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக கவிழ்ந்தது.


 இதில் பெட்டியில் அடுக்கப்பட்டு லாரியில் வைக்கப்பட்டு இருந்த 25,200 பீர்பாட்டில்களும் சாலையில் விழுந்து உடைந்து சிதறின. பாதிக்கும் மேல் பீர் பாட்டில்கள் உடையாமலும் இருந்தன. அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்தை பார்த்ததும், கீழே சிதறிக் கிடந்த பீர் பாட்டில்களை யாரும் எடுத்துச் செல்லாமல் பார்த்துக் கொண்டனர். போலீசார் வரும்வரை அரண் அமைத்து பாதுகாத்தது அந்தப் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Foxconn : 6000 பேருக்கு வேலை ரெடி.. காஞ்சிபுரத்தில் ரூ.1600 கோடியில் புதிய ஃபாக்ஸ்கான் ஆலை !!

Follow Us:
Download App:
  • android
  • ios