Asianet News TamilAsianet News Tamil

நெல்லை ரயில் நிலையம் சாதனை! முதல் முறையாக ரூ.100 கோடிக்கு மேல் வருவாய்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முதல் முறையாக 2022-23 நிதி ஆண்டில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

Tirunelveli junction railway station income cross 100 crore for the first time
Author
First Published Apr 30, 2023, 6:34 PM IST | Last Updated Apr 30, 2023, 6:54 PM IST

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முதல் முறையாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. 2022-23 நிதி ஆண்டில் 111.7 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. நெல்லையில் ரயில் நிலையத்தின் வருவாய் 100 கோடிக்கு மேல் உயர்ந்திருப்பதால் ரயில் நிலையங்களின் தர நிர்ணயத்தில் என்எஸ்ஜி-2 லிருந்து என்எஸ்ஜி-3 க்கு உயர்த்து இருக்கிறது.

500 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இருந்தால் அந்த ரயில் நிலையம் என்எஸ்ஜி-1 என வகைப்படுத்தப்படும். 100 கோடி ரூபாய் முதல் 500 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டினால் என்எஸ்ஜி-2 எனவும் 20 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை வருவாய் இருந்தால் என்எஸ்ஜி-3 எனவும் அழைக்கப்படும். இப்போது நெல்லை ரயில் நிலையத்தின் வருவாய் 100 கோடியைத் தாண்டிவிட்டதால் 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

IRCTC : இனி ஒருவருடைய ரயில் டிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. முழு விபரம்

Tirunelveli junction railway station income cross 100 crore for the first time

அண்ணாமலை கட்டுப்பாட்டில் தான் பாஜக உள்ளதா..? எங்களுக்கும் பதிலடி கொடுக்கத் தெரியும்- ஜெயக்குமார் ஆவேசம்

இதன் மூலம் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு புதிய கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நடைமேடை மற்றும் பயணிகள் ஓய்வறை விரிவாக்கம், கூடுதல் கழிப்பறை வசதி, தண்ணீர் இயந்திரங்கள், கணினி மையம், குளிர்சாதன விஐபி ஓய்வறை போன்ற புதிய வசதிகள் கிடைக்கும்.

நெல்லை ரயில் நிலையம் வருவாயில் சாதனை படைத்துள்ளது பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரயில் பயணிகள் ஆலோசனை குழு, நெல்லை ரயில் நிலையத்தில் புதிதாக மூன்று முதல் நான்கு பிளாட்பாரங்கள் அமைத்து நெல்லை, கோவை, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Tirunelveli junction railway station income cross 100 crore for the first time

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.523 கோடி, கோவை சந்திப்பு ரயில் நிலையம் ரூ.282 கோடி ரூபாய், மதுரை சந்திப்பு ரயில் நிலையம் ரூ.190.7 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன.

Viral Video : மது அருந்த டம்ளர் தர மாடிட்டியா? இந்த வாங்கிக்கோ... தர்ம அடி கொடுத்த குடிமகன்! - பரபரப்பு வீடியோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios