Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமலை கட்டுப்பாட்டில் தான் பாஜக உள்ளதா..? எங்களுக்கும் பதிலடி கொடுக்கத் தெரியும்- ஜெயக்குமார் ஆவேசம்

பா.ஜ.க பொருளாளர் சேகர் அதிமுகவை விமர்சித்தது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தெரிந்து நடந்ததா? இல்லையா? என்பதை அண்ணாமலை விளக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் தான் அண்ணாமலை மீது சந்தேகம் இருக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Jayakumar has questioned whether the BJP is in control of Annamalai
Author
First Published Apr 30, 2023, 12:55 PM IST | Last Updated Apr 30, 2023, 12:59 PM IST

பொம்மை முதல்வராக ஸ்டாலின்

சென்னை ஓட்டேரியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அரசு அதிகாரிகள், காவல்துறையினர், ஊடகத்துறையினர் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இது குறித்து முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை. பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என விமர்சித்தார். ஆட்சிக்கு வரும் போது மதுவிலக்குக்காக ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, அமைச்சர்கள் எல்லாம் டாஸ்மாக்கை மூடு என போராடினார்கள். இன்று மால்களில் தானியங்கி மது வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Jayakumar has questioned whether the BJP is in control of Annamalai

முதலமைச்சராகும் செந்தில் பாலாஜி

இளைஞர்கள் எதை குறித்தும் சிந்திக்காமல் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். எனவே நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் மணல் மாபியாக்கள் அதிகரித்து விட்டனர். விரைவில் செந்தில்பாலாஜி முதலமைச்சர் ஆகிவிடுவார் அமைச்சர்கள் எல்லாம் அவருக்கு பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு கல்லா கட்டுகிறார் என கூறினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக அமையவுள்ள பேனா நினைவு சின்னத்துக்கு சுற்று சூழல் அனுமதி அளித்தது தவறு. இதனால் மெரினாவின் அடையாளமே மாறி மெரினா கடற்கரைக்கு பதில் பேனே கடற்கரை என அழைக்கப்டும் நிலை வரும். அதனை மத்திய அரசு மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிமுக வழக்கு தொடுக்கும் என கூறினார். 

Jayakumar has questioned whether the BJP is in control of Annamalai

பதிலடி கொடுக்க தயார்

அதிமுக தலைமை குறித்து பா.ஜ.க பொருளாளர் சேகர் விமர்சித்தது குறித்த கேள்விக்கு, பா.ஜ.கவினரின் விமர்சனங்களுக்கு அதிமுகவினருக்கும் பதிலடி கொடுக்க தெரியும். வேண்டாம் என அடக்கி வைத்துள்ளோம். இது போன்ற விமர்சனங்கள் பா ஜ கவினர் அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் இல்லாததையே காட்டுகிறது. இவை எல்லாம் அண்ணாமலை சொல்லி நடக்கிறதா இல்லையா என்பதை அண்ணாமலை ஊடகங்கள் முன்னிலையில் தெளிவுப்படுத்த வேண்டும்.  அப்படி சொன்னால் தான் அண்ணாமலை மீது சந்தேகம் இருக்காது. இல்லை என்றால் அண்ணாமல சொல்லி தான் செய்கிறார்கள் என நினைக்க வேண்டி வரும் என ஜெயக்குமார் கூறினார்.

இதையும் படியுங்கள்

பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பது தான் பாஜகவின் பண்பாடா.? வீராங்கனைகளை போராட வைப்பது தான் தேசபக்தியா.? சீமான்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios