தாழ்த்தப்பட்ட மக்களை குறிவைத்து பொய்யாக கஞ்சா வழக்கு பதியும் தேனி போலீஸ்? பொதுமக்கள் முற்றுகை
தேனியில் இளைஞர்கள் மீது பொய்யாக கஞ்சா வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைப்பாகக் கூறி அல்லிநகரம் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி அல்லிநகரம் காவல் துறையினர் கடந்த மாதம் நடத்திய வாகன சோதனையின் போது கஞ்சா வைத்திருந்ததாக கூறி தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த முத்தையா, கிருஷ்ணபாண்டி, ஜீவராஜ் ஆகிய மூன்று பேர் மீது அல்லிநகரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டு மூவரையும் கைது செய்யப்பட்டதாக கூறி தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருட வந்தா திருட மட்டும் செய்யனும்; அதை விட்டுட்டு இப்படியா நடந்துக்குறது? நாற்றம் தாங்கல
கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்யாமல் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததாகக் கூறி தேனி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபனை கண்டித்தும், அல்லிநகரம் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளரை கண்டித்தும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் ஓர் ஐந்தருவி; தொட்டியில் இருந்து வெளியேறிய நீரில் குடும்பமாக குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்
அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி வாகனத்தில் ஏற்ற முற்பட்டபோது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் மயக்கம் அடைந்ததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல் நிலைய அலுவலக வாயில் முன்பும், சாலையிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மயக்கம் அடைந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.