Asianet News TamilAsianet News Tamil

தேனி வந்தடைந்த டிஐஜி விஜயகுமரின் உடலுக்கு அமைச்சர், டிஜிபி உள்பட அதிகாரிகள் கண்ணீர் மல்க அஞ்சலி

கோவையில் தற்கொலை செய்துகொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி, டிஜிபி சங்கர் ஜிவால் உள்பட காவல்துறை மூத்த அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

minister i periyasamy and dgp shankar jiwal paid respect to dig vijayakumar in theni
Author
First Published Jul 7, 2023, 5:29 PM IST

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை நடைப்பயிற்சி சென்று வந்தபின் தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது உள்ளது. விஜயகுமாரின் உடல் கோயம்புத்தூரில் இருந்து சாலை வழியாக தேனி ரத்தினம் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அவரது இல்லத்திற்கு முன்பு வைக்கப்பட்ட விஜயகுமாரின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுது சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படத்தியுள்ளது. அவரின் வீட்டிற்கு முன்பாக வைக்கப்பட்ட விஜயகுமாரின் உடலுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் ஏராளமான அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டிஐஜி விஜயகுமாரின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினையோ, பணி சுமையோ காரணம் இல்லை - ஏடிஜிபி விளக்கம்

விஜயகுமாருக்கு நெருங்கிய நண்பர்களான காவல்துறை உயர் அதிகாரிகள் விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் விஜயகுமாரின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வளைகாப்பு கொண்டாடிவிட்டு வெளியில் சென்ற கர்ப்பிணி, கணவன் பலி; உறவினர்கள் கதறல்

Follow Us:
Download App:
  • android
  • ios