தமிழகத்திற்கு வரும் கேரளா வாகனங்கள் அடித்து நொறுக்கப்படும்; எச்சரிக்கை விடுத்த நபர் மீது போலீஸ் அதிரடி
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்படும் என்று சமூக வலைதளம் வாயிலாக எச்சரிக்கை விடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தமிழக, கேரளா மாநில எல்லையான தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்திற்கு ஏலத் தோட்ட வேலைக்காக பெண்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பம் பகுதியில் இருந்து ஏலத்தோட்ட வேலைக்காக பெண்கள் ஜீப்பில் அழைத்து சென்ற போது கேரள பகுதியை சேர்ந்த சில மர்ம நபர்கள் ஜிப் ஓட்டுநரை அடித்து தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு வரும் கேரளா வாகனங்கள் அடித்து உடைக்கப்படும் என சமூக வலைத்தளத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த கம்பம் நகர செயலாளர் அறிவழகன் (வயர் 42) ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
சென்னையில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை தாய் கண் முன்னே முட்டி பந்தாடிய மாடு
இந்நிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆடியோ வெளியிட்ட அறிவழகன் மீது கம்பம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் இது போன்ற சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பகலில் தர்ணா; இரவில் தற்கொலை - இளம் பெண்ணின் பெற்றோர் கதறல்