கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு; காவல் துறையினருக்கு எதிராக உறவினர்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு

தேனியில் கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த நிலையில்  காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

63 year old woman killed road accident public protest for quick action against accused in theni district vel

தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு பூந்தோட்ட தெருவைச் சேர்ந்தவர் ஏசம்மாள் (வயது 63). மூதாட்டியான இவர் நேற்றிரவு தேனி அருகே ஆர்.எம்.டி.சி. காலனியில் உள்ள தனது மகள் சத்யபிரபாவை பார்ப்பதற்கு சென்றுள்ளார். தேனி - போடி சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து சாலையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏசம்மாள் விபத்துக்குள்ளானார்.

இதில் படுகாயமடைந்த மூதாட்டி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை  உயிரிழந்தார்.  இது தொடர்பாக அவரது மகன் சத்தியராஜ் அளித்த புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கோவை ஐயப்பன் கோவிலில்  எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் பங்கேற்பு

இந்நிலையில் விபத்து குறித்து காவல்துறையினர் தகுந்த விசாரண நடத்தவில்லை எனக் கூறி அவரது உறவினர்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்து ஏற்படுத்திய காரை அடையாளம் காண்பதில் போலீசார் காலதாமதம் செய்வதாகவும், உரிய கார் ஓட்டுநரை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பழனிசெட்டிபட்டி காவல்நிலையம் அருகேயுள்ள திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios