சிவகங்கையில் செம காட்டு காட்டும் கொரோனா... மாவட்ட எஸ்.பி. ரோஹித்நாதன் ராஜகோபாலுக்கு தொற்று உறுதி..!

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

sivaganga district sp rohit nathan Affected Corona

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு உச்சத்தை அடைந்து வருகிறது. இதுவரை சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை நிலைகுலைய செய்து வருகிறது. 

sivaganga district sp rohit nathan Affected Corona

இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிவகங்கையில் கடந்த 3 நாட்களில் 250 பேருக்கு அங்கு தொற்று உறுதியாகி உள்ளது. தினமும் 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிவகங்கையில் நேற்று வரை 564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 217 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 340 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

sivaganga district sp rohit nathan Affected Corona

இந்நிலையில், சிவகங்கை எஸ்.பி. ரோஹித்நாதன் ராஜகோபாலுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் சோதனை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios