Asianet News TamilAsianet News Tamil

1 ரூபாய்க்கு ஒரு சட்டை விற்பனை... ஜவுளிக் கடையில் அலைமோதும் கூட்டம்..!

சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடையில் ஒரு ரூபாய்க்கு சட்டை விற்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. 

Selling a shirt for 1 rupee
Author
Tamil Nadu, First Published Jun 19, 2019, 6:07 PM IST

சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடையில் ஒரு ரூபாய்க்கு சட்டை விற்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. Selling a shirt for 1 rupee

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, ஐந்து விளக்கு பகுதியில் புதிதாக துணிக்கடை ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. அறிமுகச் சலுகையாக கடைக்கு வரும் முதல் ஆயிரம் நபர்களுக்கு ஒரு சட்டை ஒரு ரூபாய் வீதம் வழங்கப்படும் என அந்த துணிக்கடை நிர்வாகம் அறிவித்தது. 

இந்த அறிவிப்பை தொடர்ந்து அதிகாலை முதலே சட்டை வாங்குவதற்கு கடை முன்பு பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கடை முன்பு குவிந்தனர். இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சட்டை வாங்க வந்த பொதுமக்களை வரிசைப்படுத்தி நிற்கவைத்தனர்.  Selling a shirt for 1 rupee

அவ்வாறு நிறுத்தப்பட்ட வரிசையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலமணி நேரம் நின்று இளைஞர்கள் சட்டைகளை வாங்கிச் சென்றனர்.  ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை வழங்கப்பட்டதால் அந்த ஜவுளிக்கடை முன்பு பரபரப்பு ஏற்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios