ஷாக்கிங் நியூஸ்.. கபடி விளையாடிய சிறுவன்.. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.. இதுதான் காரணமா?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் நகர் வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரதாப்(16). அரசு ஐடிஐயில் ஏசி மெக்கானிக் 2ம் ஆண்டு படித்து வந்தார். கபடி போட்டியில் ஆர்வம் கொண்டவர்.

boy who played kabaddi fainted and died in karaikudi

கோயில் திருவிழாவில் நடந்த கபடி போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராமத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் நகர் வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரதாப்(16). அரசு ஐடிஐயில் ஏசி மெக்கானிக் 2ம் ஆண்டு படித்து வந்தார். கபடி போட்டியில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில், காரைக்குடி செஞ்சை பகுதியில் கோயில் முளைப்பாரி திருவிழாவையொட்டி கபடி போட்டி நடைபெற்றது. இதில், கிரீஸ் பிரதர்ஸ் அணி மற்றும் கணேசபுரம் யோக முனீஸ்வரர் அணிகள் விளையாடின. அப்போது, மாற்று அணி வீர்கள் பிடிக்க முயன்ற போது பிரதாப்  நிலைதடுமாறி கீழே விழுந்து தலை ரப்பர் மேட்டில் அடிபட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல்! வேறு சாதி பெண்ணை காதல் திருமணம் செய்த மகன் ஆணவக்கொலை.. ஐசியூவில் மருமகள்.!

boy who played kabaddi fainted and died in karaikudi

பின்னர் சுதாரித்து எழுந்த சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இதனால், அங்கிருந்தவர்கள் பதறிபோய் பிரதாப்பை அங்கிருந்து தூக்கிக்கொண்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரதாப்பை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பிரதாப்பின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க;-  அட கடவுளே! திருமணமான 4வது நாளில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்! எங்களை விட்டுட்டு போயிட்டையே பெற்றோர் கதறல்

boy who played kabaddi fainted and died in karaikudi

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனை முடிவுக்கு பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும். கபடி போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் போது இளைஞர்கள் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios