120 ஆடுகள்.. 21 மாடுகள்... பிரமாண்ட படையலுடன் நரிக்குறவர்கள் கொண்டாடிய திருவிழா!
விழாவில் கலந்துகொண்ட மக்கள் பலியிட்ட எருமைகளின் ரத்தத்தை குடித்து, உடலிலும் பூசிக்கொண்டனர். இறைச்சியை காளிக்கு படையலிட்டனர்.
சிவகங்கையில் நடைபெற்ற நரிக்குறவர் இன மக்களின் திருவிழாவில் 21 எருமை மாடுகள், 120 ஆடுகள் பலி கொடுத்து படையலிட்டு வழிபாடு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் பழமலைநகரில் முந்நூறுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் காளியம்மன், மீனாட்சியம்மன், மாரியம்மன், மதுரைவீரன் உள்ளிட்ட தங்கள் குல தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.
இந்த ஆண்டின் திருவிழா கடந்த 8ஆம் தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு நரிக்குறவர் குடியிருப்புப் பகுதியில் ஓலைக் குடில்கள் அமைக்கப்பட்டன. தினமும் அந்தக் குடிலில் வைத்து வழிபாடு செய்துவந்ததனர். விழாவின் அச்ச நிகழ்வாக சனிக்கிழமை அதிகாலை சாமியாடும் நிகழ்ச்சி நடந்தது.
உலகிலேயே மிகப் பெரிய பசுமை ரயில்வே! மின்மயமாக்கப்பட்ட 68,000 கி.மீ. ரயில்பாதை!!
அதைத் தொடர்ந்து காளியம்மனுக்கு 21 எருமை மாடுகள், 120 ஆடுகள் பலியிடப்பட்டன. அனைவரும் நோய் நொடி இல்லாமல் வாழ, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் ஆண்டுதோறும் இவ்வாறு பலி கொடுப்பதாக நரிக்குறவர் இன மக்கள் கூறுகின்றனர்.
விழாவில் கலந்துகொண்ட மக்கள் பலியிட்ட எருமைகளின் ரத்தத்தை குடித்து, உடலிலும் பூசிக்கொண்டனர். இறைச்சியை காளிக்கு படையலிட்டனர். இந்த விழாவில் சிவகங்ககை மட்டுமின்றி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூர், பட்டுக்கோட்டை மாவட்டங்களில் இருந்தும் 3,000 க்கும் அதிகமான நரிக்குறவர் இன மக்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் அனைவருக்கும் காளிக்குப் படைக்கப்பட்ட ஆடு, மாடுகளைச் சமைத்து விருந்து அளிக்கப்பட்டது. விருந்தைத் தொடர்ந்து பல போட்டிகளும் நடத்தப்பட்டன. மாலையில் பெண்கள் மது எடுப்பு ஊர்வலம் நடைபெற்றது. நள்ளிரவில் எரிசோறு விடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
செருப்பை ஒளித்து வைத்ததால் விபரீதம்! பள்ளியிலேயே உயிரிழந்த மாணவர்!!