Asianet News TamilAsianet News Tamil

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி; இளம்பெண் பரபரப்பு புகார்

அரசு வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்து பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த  நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு இளம்பெண் சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

young lady petition on money laundering case in salem district
Author
First Published Mar 6, 2023, 6:37 PM IST

சேலம் மாவட்டம் தலைவாசல் தெற்கு தியாகனூர் அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி, ஆறுமுகம். இவர்களது மகள் நித்யா. பி.எட்., படித்துள்ளார். வயது 32. தாய் தந்தை இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.  

பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூர் அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. நித்தியாவுக்கு வரன் பார்த்துக் கொடுப்பதாகக் கூறி அவர்களது குடும்பத்தில் அறிமுகமாகி உள்ளார். இந்த நிலையில், நித்யாவுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பேரம் பேசி 20 லட்சம் ரூபாய் செல்லமுத்து வாங்கியுள்ளார். இதையடுத்து,  2018 ஆம் ஆண்டு வாங்கிய பணத்தை இன்று வரை தரவில்லை. வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லை.  

பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு செல்லமுத்து வீட்டுக்கு சென்று நித்யா குடும்பத்தினர் கேட்டுள்ளனர். அப்போது, விரைவில் அவர்களது பணத்தை தந்துவிடுவதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை பணத்தை திருப்பித் தரவில்லை. 

அகழாய்வில் தோண்ட தோண்ட புதையல்கள்; கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து முதல்வர் பெருமிதம்
 
சில நாட்களுக்கு முன்பு செல்லமுத்துவின் வீட்டுக்கு நித்யா குடும்பத்தினர் சென்று பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். வெளியில் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியவில்லை. எனவே, பணத்தை கொடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர். அப்போது, வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு  பணத்தை தருகிறேன் என்று செல்லமுத்து கூறியுள்ளார். மேலும், நித்யா குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து, தலைவாசல் காவல் துறையில் நித்யா குடும்பத்தினர் புகார் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இதுவரை செல்லமுத்து மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 

பெரம்பலூரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்; ஆட்டோ ஓட்டுநர் கைது

இதைத்தொடர்ந்து, இன்று சேலம் காவல் கண்காணிப்பாளர் சிவகுமாரை நேரடியாக நித்யா, அவரது பெற்றோர், சகோதரர் ஆகியோர் சந்தித்து, செல்லமுத்து மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு கோரிக்கை வைத்தனர். புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி அளித்து உள்ளார் என்று நித்யா பெற்றோர் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios