கள்ளக்காதலியின் பேச்சைக் கேட்டு 5 ஆண்டுகளாக கொடுமை; காவலர் மீது பெண் பரபரப்பு புகார்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கள்ளக்காதலியின் பேச்சைக் கேட்டு தலைமை காவலர் வீட்டிற்கு வர மறுப்பதாகக் கூறி 3 குழந்தைகளுடன் பெண் ஆட்சியரிடம் மனு.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மானத்தாள் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் தமிழ்நாடு காவல்துறையில் சென்னையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சேடப்பட்டியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரியும் அமிர்தவல்லி என்பவருடன் சம்பத்குமாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக சம்பத்குமார் சரஸ்வதியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சென்னையில் தலைமை காவலராக பணியாற்றும் சம்பத்குமார் சேலத்தில் உள்ள மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு வருவதாக கூறி அலுவலகத்தில் இருந்து விடுப்பு பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வராமல் அமிர்தவள்ளியின் வீட்டிற்கு மட்டுமே செல்வதாகவும், இது குறித்து அமிர்தவள்ளியின் வீட்டிற்கு நேரில் கேட்கச் சென்றபோது அவர்களுடன் சம்பத்குமாரும் சேர்ந்து சரஸ்வதியை சராசரியாக தாக்கி உள்ளனர்.
ராகுல் காந்தி மீதான சூரத் நீதிமன்ற நடவடிக்கை நகைச்சுவையாக உள்ளது - சீமான் விமர்சனம்
இது தொடர்பாக சரஸ்வதி தொளசம்பட்டி காவல் நிலையம், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், ஓமலூர் சரக துணை கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் மனு மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து திருமணம் மீறிய உறவால் குடும்ப செலவிற்கு கூட பணம் தராமல் அடித்து துன்புறுத்தும் கணவர் மற்றும் கணவரின் கள்ளக்காதலி உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சரஸ்வதி தனது 3 குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
கோவையில் 12 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை; சிறுவன் உள்பட 3 பேர் கைது