இன்னும் 20 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது... அரசு அதிரடி..!

பல்வேறு இடங்களில் மதுபானம் கிடைக்காத விரக்தியில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது, டாஸ்மாக் கடைகளில் திருடுவது உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்தன. மேலும், கள்ளச்சாரயம் காய்ச்சுவதும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவற்றையெல்லாம் அரசு கருத்தில்கொண்டுள்ளதால் புதிய நேர கட்டுப்பாட்டுகளுடன் டாஸ்மாக் கடைகளை அரசு திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின.
 

Tasmac will be closed April 30...tamil nadu government announcements

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று மின்சாரம் மற்றும் ஆயத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவது காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவித்தார். ஆனால், நேற்று மாலையே தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.Tasmac will be closed April 30...tamil nadu government announcements

இந்நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கின்றன. அத்தியாவசிய தேவையற்ற சேவைகள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசே ஏற்று நடத்தும் அதன் முக்கிய வருவாய் காரணியான 5300 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Tasmac will be closed April 30...tamil nadu government announcements

இதனால், பல்வேறு இடங்களில் மதுபானம் கிடைக்காத விரக்தியில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது, டாஸ்மாக் கடைகளில் திருடுவது உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்தன. மேலும், கள்ளச்சாரயம் காய்ச்சுவதும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவற்றையெல்லாம் அரசு கருத்தில்கொண்டுள்ளதால் புதிய நேர கட்டுப்பாட்டுகளுடன் டாஸ்மாக் கடைகளை அரசு திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின.

Tasmac will be closed April 30...tamil nadu government announcements

இந்நிலையில், இதுதொடர்பாக மின்சாரம் மற்றும் ஆயத்துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில் மக்கள் நலனே முக்கியம் என்பதால் ஏப்ரல் 30-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios