தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் நிவேதிதா. சேலம் மாவட்டம் ஓமலூரில் இருக்கும் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் இவர் விடுமுறை தினங்களில் ஊருக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று மாணவியின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவரது தோழிகள் சிலர் அவரை பார்க்க வந்தபோது அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன? போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறினர். மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு விடுதி காப்பாளர்கள் விரைந்து வந்துள்ளனர். பின் நிவேதிதாவின் தற்கொலை குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஒருதலைக்காதலால் நிவேதிதா தற்கொலை செய்ததாக தெரிய வந்ததுள்ளது. வாலிபர் ஒருவரை மாணவி தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலை அந்த வாலிபர் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி கடந்த 10 ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். விடுதியில் இருக்கும் பிற மாணவிகள் அனைவரும் கள ஆய்வறிக்கை தயாரிப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது. 

இதனால் இரண்டு நாட்கள் கழித்தே நிவேதிதா தூக்கில் தொங்கியது தெரிய வந்துள்ளது. மாணவி எழுதிய டைரியும், காதல் கடிதங்களும் சிக்கியுள்ளன. மேலும் அவர் தொலைபேசியில் இறுதியாக யாரிடம் பேசினார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

10 கார்கள் அடுத்தடுத்து பயங்கர மோதல்..! ஒருவர் பலி..! 15 பேர் படுகாயம்..!