சொத்துக்களை அபகரித்து கொலை மிரட்டல் விடுக்கும் ஆளுங்கட்சி ஒன்றிய செயலாளர்.. கதறும் திமுக பிரமுகர் வீடியோ.!

ஆன்லைனில் புகார் கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக கேட்டால் நான் ஆளுங்கட்சியின் ஒன்றிய செயலாளர் உன்னால் என்ன செய்ய முடியும். நானும் அதே கட்சிக்காரர்தான். திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறேன் என்று சொன்னதற்கு தகாத வார்த்தையால் திட்டினார்.  சபரீசன் என்னுடைய கையில் இருக்கிறார்.

Property confiscation and death threats... Salem Collectors Office sucide Attempt DMk family

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் திமுக பிரமுகர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தீக்குளிக்க முயற்சி

சேலம் மாவட்டம் உடையாப்பட்டி பாலமுருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (31). இவர் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவர் தனது மனைவி சாந்தி, மகன்கள் கதிரவன் (12), சரண் (10) மற்றும் தாய் ஆனந்தி (53) ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, நாகராஜன் உள்ளிட்ட 5 பேரும் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அருகில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து வந்து அவர்கள் மீது ஊற்றி தடுத்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

Property confiscation and death threats... Salem Collectors Office sucide Attempt DMk family

ரூ.67 லட்சம் கேட்டு மிரட்டல்

அப்போது கண்ணீர் மல்க திமுக பிரமுகர் நாகராஜன் கூறுகையில்:- சேலம் அம்மாபேட்டையில் நான் பேக்கரி கடை நடத்தி வருகிறேன். அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக நிர்வாகி விஜயகுமார் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, மேட்டூர், ஏற்காடு தொகுதிகளில் போட்டியிட கட்சி தலைமையிடம் சிலருக்கு சீட் வாங்கி தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கினார். அந்த பணத்தில் ரூ.67 லட்சம் என்னிடம் கொடுத்துள்ளதாகவும், அதை திரும்ப தரக்கோரியும் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி எனது குடும்பத்தினரை அடித்து துன்புறுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக ஆன்லைனில் புகார் கொடுத்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக கேட்டால் நான் ஆளுங்கட்சியின் ஒன்றிய செயலாளர் உன்னால் என்ன செய்ய முடியும். நானும் அதே கட்சிக்காரர்தான். திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறேன் என்று சொன்னதற்கு தகாத வார்த்தையால் திட்டினார்.  சபரீசன் என்னுடைய கையில் இருக்கிறார். சிஎம் பிஏ ஒருநாளைக்கு 4 முறை எனக்கு போன் செய்வார் என்று ஆவணவாக பேசியதாக கதறியபடி கூறியுள்ளார். 

 

கொலை மிரட்டல்

பணத்தை கேட்டு எனது குடும்பத்தினருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வேறு வழியின்றி குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தேன். எனவே, பணம் கொடுத்ததாக கூறி மிரட்டல் விடுக்கும் தி.மு.க. நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் யாரிடமும் பணத்தை வாங்கவில்லை என்று கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios