சென்னையை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் கட்டண சிகிச்சை முறை தொடக்கம்

மக்கள் மத்தியில் தனியார் மருத்துவமனை மீதான மோகத்தை குறைக்கும் வகையில் அரசு பே வார்டுகள் நடை முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

minister ma subramanian inaugurates pay wards in salem government hospital

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கட்டண சிகிச்சை பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுப்ரமணியன், சென்னையில் உள்ளது போல் சேலம், மதுரை, கோவை அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சை பிரிவு தொடங்கப்படும் என 2022ல் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி சேலத்தில் தற்போது 10 கட்டண படுக்கைகள் வசதி கொண்ட சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது, இதில் தனியார் மருத்துவமனையை விட கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னைக்கு வெளியே முதன் முதலில் சேலத்தில்தான் பே வார்டுஸ் துவங்கப்பட்டுள்ளதாகவும், இதனை தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் துவங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்த அவர் மக்கள் மத்தியில் தனியார் மருத்துவமனை மீதான மோகத்தை குறைக்கவே தமிழக அரசு பே வாட்டுஸ் எனும் நடைமுறையை கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாடு முழுவதும் தேசிய அளவில் குடற்புழு நீக்க தினம் அனுசரிக்கப்படுவதற்கு முதன் முதலில் வித்திட்டது திமுக அரசுதான். மேலும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க உள்ளதாகவும், இதற்காக ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 620 இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 2.69 கோடி பேர் பயன்பெற உள்ளதாகவும் தெரிவித்த அவர் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியில் 1.30 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். 

’மேலும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சர்ப்ரைஸ் விசிட் மூலம் அரசு மருத்துவர்கள் பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு பணிக்கு செல்வது தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர்கள் இடையே கடும் மோதல்

முன்னதாக சேலம் தொங்கும் பூங்காவில் உள்ள பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார்.    

மாநில அளவிலான கபடி போட்டி; வீரர்களுடன் கபடி விளையாடி மகிழ்ந்த நடிகர் கிங்காங்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios