குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை அறிவிப்பு..!
தமிழத்தில் 9 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி மற்றும் ஊரகத் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சி மற்றும் ஊரக தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் அவகாசம் நிறைவடைந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 19-ம் தேதி வெளியிட்டது. அடுத்து வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு 5 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குடிமகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழத்தில் 9 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி மற்றும் ஊரகத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் அவகாசம் நிறைவடைந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 19-ம் தேதி வெளியிட்டது. அடுத்து வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் வரும் 25-ம் தேதி மாலை 5 மணி முதல் 27-ம் தேதி மாலை 5 மணி வரையும், 28-ம் தேதி மாலை 5 மணி முதல் 30-ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 2-ம் தேதி முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.