வாங்க.. வாங்க.. பம்பர் ஆஃபர்.. ஹெல்மேட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி ப்ரீ.. அலைமோதிய கூட்டம்..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்தே பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. கடந்த வாரம், தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் கடும் மழை பெய்தது. மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டும், போக்குவரத்து சிக்கல் காரணமாகவும் கடந்த ஒரு மாதமாகவே காய்கறிகள் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன.
சேலத்தில் ஹெல்மேட் வாங்கினால் தக்காளி இலவசம் என்ற அறிவிப்பால் அறிந்த மக்கள் கடையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்தே பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. கடந்த வாரம், தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் கடும் மழை பெய்தது. மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டும், போக்குவரத்து சிக்கல் காரணமாகவும் கடந்த ஒரு மாதமாகவே காய்கறிகள் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தக்காளி விலை றெக்கைக் கட்டி பறக்கிறது. தக்காளி விலை ரூ.150 வரை உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலையை காட்டிலும் கிலோ தக்காளி விலை அதிகரித்தது. இதனால், நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் தக்காளி உள்பட காய்றிகள் வாங்க தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு கிலோ சிக்கன் பிரியாணி வாங்கினால் அரை கிலோ தக்காளி தக்காளி உள்ளிட்ட பல்வேறு புது விதமான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் ரூ.449 மதிப்புள்ள ஒரு ஹெல்மேட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் இலவச தக்காளி விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த ஆஃபர் 2 நாட்கள் மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் ஹெல்மெட் வாங்கி கொண்டு ஒரு கிலோ தக்காளியையும் பெற்று சென்றனர்.