சேலம், நாமக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சேலம், நாமக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்;- சேலம், நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், கோவை, திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியின் வாத்தலையில் 14 செ.மீ., தேவாலா, சமயபுரத்தில் தலா 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
